IPL 2025 RCB vs PBKS Bengaluru: பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு ரங்கல் சேகரிக்க சேர்க்க திணறி வருகிறது.
IPL 2025 RCB vs PBKS Bengaluru: பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு ரங்கல் சேகரிக்க சேர்க்க திணறி வருகிறது.
Published on: April 18, 2025 at 11:18 pm
Updated on: April 18, 2025 at 11:23 pm
பெங்களூரு ஏப்ரல் 18 2025: ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் இன்று (ஏப்.18 2025) நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது. இந்த நிலையில் பஞ்சாப் அணி பெங்களுருவை பேட்டிங் செய்ய பணித்தது. இன்றைய போட்டியில், மழை காரணமாக ஆட்டம் 14 ஓவர்கள் ஆக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, பெங்களூரு அணித் தரப்பில் பில் சால்ட், விராட் கோலி ஓப்பனர்களாக இறங்கினார்கள். பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி ஒரு ரன்னிலும் பில் சால்ட் 4 ரன்னிலும் பெவிலியனுக்கு நடையை கட்டினார்கள். ஒன் டவுன் இறங்கிய ராஜெட் பட்டிதார் மட்டும் 18 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும்.
திம் டேவிட் அரை சதம்
தொடர்ந்து லயம் லிவிங்ஸ்டான் (4), ஜித்தேஷ் ஷர்மா (2), குருணால் பாண்டே (1) ரன்னிலும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினார்கள். இந்த நிலையில், அதிரடியாக ஆடிய திம் டேவிட் 26 பந்துகளில் அதிரடியாக ஆடி கடைசி வரை அவுட் ஆகாமல் 50 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்ஸர்கள், 5 பௌண்டரிகள் அடங்கும். இதற்கிடையில், மனோஜ் ஒரு ரன்னிலும் புவனேஸ்வர் குமார் எட்டு இரண்டிலும், யாஸ் தயால் ரன் எதுவும் எடுக்காமலும் நடையை கட்டினார்கள்.
96 ரன்கள் இலக்கு
இந்த நிலையில், பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு 95 ரன்களை டார்கெட் ஆக நிர்ணயித்துள்ளது.
இதையும் படிங்க 2025 மார்ச் மாதத்தின் சிறந்த வீரர்.. யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com