India vs Oman Asia Cup 2025: 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்துவருகிறது.
India vs Oman Asia Cup 2025: 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்துவருகிறது.
Published on: September 19, 2025 at 10:49 pm
அபுதாபி, செப்.19, 2025: இந்தியா, ஓமன் அணிகள் மோதும் டி-20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் ஸ்டேடியத்தில் இன்று (செப்.19, 2025) நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 188 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார்.
சஞ்சு சாம்சன் அரை சதம்
அடுத்த களம் கண்ட சஞ்சு சாம்ஸன் நிதானமாக ஆடி 45 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடங்கும்.
மறுபுறம் ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும், சிவம் துபே 5 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர்.
எனினும், அக்ஸர் பட்டேல் 26 ரன்கள் (3 பவுண்டரி, 1 சிக்ஸர்), திலக் வர்மா 29 ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்தார்.
தொடர்ந்து ஹர்ஷித் ரானா 13 ரன்னிலும், அர்ஷ்தீப் சிங் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். குல்தீப் யாதவ் 1 ரன்னில் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்றார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.
189 ரன்கள் இலக்கு
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்துவருகிறது. ஜதீந்தர் சிங் 14 ரன்னிலும், ஆமிர் கலீம் 14 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க : நீரஜ் சோப்ராவுக்கு என்னாச்சு? ஜப்பான் மண்ணில் கடும் ஏமாற்றம்.. 8வது இடத்துக்கு தள்ளப்பட்ட சாம்பியன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com