India vs Bangladesh Test match in Chennai | இந்தியாவும் வங்கதேசமும் இந்தத் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.
India vs Bangladesh Test match in Chennai | இந்தியாவும் வங்கதேசமும் இந்தத் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.
Published on: September 8, 2024 at 8:15 am
India vs Bangladesh Test match in Chennai | இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் செப்.19ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா வங்கதேச அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை திங்கள்கிழமை (செப்.9, 2024) முதல் விற்பனையாகிறது.
டிக்கெட் கட்டணம்
போட்டிக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.1000 முதல் ரூ.15 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது சி.டி. மற்றும் இ லோயர் டிக்கெட் ரூ.1000 ஆகவும், ஐ.ஜெ, கே லோயர் டிக்கெட் ரூ.2 ஆயிரமாகவும், ஐ, ஜெ, கே மேல்வரிசை டிக்கெட்ரூ.1250 ஆகவும், கேஎம்கே டெர்ரேஸ் (மாடி) டிக்கெட் ரூ.5 ஆயிரமாகவும், சி, டி, இ ஏசி ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸ் டிக்கெட் ரூ.10 ஆயிரமாகவும், ஜெ ஏசி ஹாஸ்பிலாடிட்டி பாக்ஸ் ரூ.15 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கான்பூரில் 2வது டெஸ்ட்
இந்தியாவும் வங்கதேசமும் இந்தத் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் நிலையில், இரண்டாம் போட்டி செப்.27ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.
இதையும் படிங்க : சச்சின், பிராட்மேன் கூட லிஸ்டில் இல்லை: இங்கிலாந்தின் ஆலி பாப் புதிய சாதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com