இதை கவனிச்சிங்களா? சத்தமில்லாமல் சாதித்த ஜடேஜா: தொடப்போகும் சாதனை என்ன தெரியுமா?

Jadeja towards 300 wicket record | இந்தியா வங்காளதேசம் மோதும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா நிகழ்த்தவுள்ள சாதனை தெரியுமா?

Published on: September 24, 2024 at 9:33 am

Jadeja towards 300 wicket record | வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆல் ரவுண்டர் ஜடேஜா சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தினார். சொற்ப ரன்களில் இந்திய வீரர்கள் அவுட் ஆன நிலையில், ஜடேஜா அஸ்வின் கூட்டணி 199 ரன்கள் வரை குவித்து இந்தியாவை கௌரவமான ஸ்கோர் எட்டச் செய்தது.

இந்த போட்டியில் அஸ்வின் சதம் அடித்தார்; ஆறு விக்கெட் களை வீழ்த்தினார். சதத்தை தவறவிட்ட ஜடேஜா, 5 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி இருந்தார். இதில் முக்கியமாக லிட்டனை அவர் அவுட் செய்திருந்தார். வங்கதேசத்தைப் பொறுத்தவரை லிட்டன் ஆபத்தான வீரராக பார்க்கப்படுகிறார்.

தற்போது ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3000 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட உள்ளார். அதேபோல் 300 விக்கெட்டுகள் என்ற சாதனையும் அவர் நெருங்குகிறார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா 299 விக்கெட்டுகள் வரை வீழ்த்தியுள்ளார். ஆக கான்பூரில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா 300 விக்கெட் என்ற சாதனையை நிகழ்த்த வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அஸ்வின் ஜடேஜா ஜோடி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இருவரும் இந்திய மண்ணில் 45 டெஸ்ட் மேட்ச் களில் விளையாடி உள்ளனர். இதில் அஸ்வின் 263 விக்கெட்டுகளும், ஜடேஜா 218 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க  முதல் இன்னிங்ஸை விட கூடுதல் 60 ரன்.. நிலைகுலைந்த வங்கதேசம்: 6 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com