ஆண்கள் அணிக்கான டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆண்கள் அணிக்கான டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Published on: November 25, 2024 at 11:35 am
Davis Cup 2024 | ஆண்கள் அணிக்கான டேவிஸ்கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இத்தாலி – நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின. போட்டியின் முதல் ஆட்டத்தில் காலிறுதியில் ரபேல்நாடாலை வீழ்த்திய இத்தாலியின் மேட்டியோ பிரெட்டினி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் வான் டே ஜாண்ட்ஷூல்பினை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரராரான ஜன்னிக் சின்னெர் நெதர்லாந்தின் டாலோன் கிரீஸ்பூக்கரை 7-6(2), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலம் இத்தாலிய அணி 2-0 என்று கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதர்லாந்து அணி இறுதி கட்டம் வரை வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். அதேவேளையில், கடந்த 11 ஆண்டுகளில் இத்தாலி அணி டேவிஸ்கோப்பியை அடுத்தடுத்து வென்றுள்ள (1976, 2023,2024) முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதையும் படிங்க ஆசிய மகளிர் ஹாக்கி ; கோப்பையை கைப்பற்றிய இந்தியா ; பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com