Rashid Khan | ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அக்டோபர் 03 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ரஷித், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமண கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் திருமணம், பஷ்டூன் முறைப்படி நடைபெற்றது.
தற்போது, அவரது திருமண இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றன. மேலும், ரஷீத்தின் திருமணம் நடந்த ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
பல ஆப்கானிஸ்தான் நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் ரஷீத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான முகமது நபி, ரஷித் தனது வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
ILT20 2026 auction: சர்வதேச டி20 லீக் (ILT) ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனை ஒருவரும் ஏலத்தில் எடுக்கவில்லை….
Vaibhav Suryavanshi: ஆஸ்திரேலியாவில் அதிவேக சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்ஷி….
Tilak Varma: “பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்; நான் நிதானமாக நின்று ஆடினேன்” என இந்திய கிரிக்கெட்டர் திலக் வர்மா கூறினார்….
Suryakumar Yadav: பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டது குறித்து பேசியுள்ளார் இந்திய கேப்டன்…
Pakistani woman fan: பாகிஸ்தான் ரசிகை ஒருவரின் பேட்டி இணையத்தில் வைரலாகிவருகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்