Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்.
Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்.
Published on: July 13, 2025 at 11:42 am
திருநெல்வேலி, ஜூலை 13 2025: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பணகுடி அருகே கடம்பன்குளத்தில் அய்யா வைகுண்டர் திருத்தாங்கல் அமைந்துள்ளது. இந்தத் திருத்தாங்கல் அய்யா வைகுண்டர் கால்நாட்டிக் கொடுத்த சிறப்புமிக்கது.
இத்திருத்தலத்தில் இருந்துதான் ஒவ்வொரு திருவிழாவின்போதும், அய்யா வைகுண்டர் தலைமை பதி அமைந்துள்ள சாமிதோப்புக்கு திருக்கொடிக் கயிறும், திருக்கொடிப் பட்டமும் பாதயாத்திரையாக கொண்டு செல்லப்பட்டும்.
இவ்வாறு பல்வேறு சிறப்பு மிக்க அய்யா வைகுண்டர் திருத்தாங்கலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆனித் திருவிழா நடைபெறுகிறது. இரவு அன்னதானம் வழங்கப்படும். அதன் பின்னர், அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் அருள் பாலிப்பார். தொடர்ந்து, திங்கள்கிழமை (ஜூலை 14 2025) மதியம் அய்யா வைகுண்டருக்கு உச்சிப் பணிவிடை நடைபெறும்.
மேலும், சாமியாட்டம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவு அய்யா பூ வாகனத்தில் ஊர் சுற்றி வந்து அன்புக் கொடி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தொட்டில் பழ அன்ன தர்மத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். தொடர்ந்து, அய்யா வைகுண்டருக்கு வழக்கமான பணிவிடைகள் நடைபெறும்.
இதையும் படிங்க : வேலை இல்லை.. ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com