Mythology | ராமாயண போரில் வீழ்த்தப்பட்ட ராவணன், லட்சுமணனுக்கு உபதேசித்த மூன்று தத்துவங்கள் தெரியுமா?
Mythology | ராமாயண போரில் வீழ்த்தப்பட்ட ராவணன், லட்சுமணனுக்கு உபதேசித்த மூன்று தத்துவங்கள் தெரியுமா?
Published on: September 18, 2024 at 2:37 pm
Mythology | பூமாதேவியின் அம்சமான தாய் சீதாலட்சுமியை, ராவணன் கடத்தி வர அவனது அழிவு ஆரம்பமாகிறது. ஏகபத்தினி விரதனான ராமன், தனது சகோதரன் லட்சுமணன் உடன் வந்து ராவணனை வதம் செய்கிறான். 13 நாட்கள் நடைபெறும் இந்த போரில் ராவணன் வீழ்த்தப்படுகிறான். அப்போது ராமபிரான் லட்சுமணனிடம், லட்சுமணா இக்கணம் நான் ஒன்றை உனக்கு உரைக்கிறேன்; இந்தப் போரில் நீயோ நானோ மாபெரும் வீரன் அல்ல. அதோ பார்.
அங்கே மரணப் படுக்கையில் படுத்து இருக்கிறானே, ராவணன் அவன் தான் உண்மையான வீரன். அவனிடம் சென்று நீ உபதேசத்தை பெற்று வருவாயாக என கூறுகிறார். இதைக் கேட்ட லட்சுமணன், முதலில் அரைகுறை மனதோடு ராவணனிடம் உபதேசம் பெற செல்கிறான். அங்கு லட்சுமணனின் அலட்சியப் பேச்சியினால் கோபமற்ற ராவணன் உபதேசிக்க மறுத்து விடுகிறான்.
பின்னர் தன் அகங்காரம் மறந்து லட்சுமணன், முழு மனதோடு ராவணனிடம் உபதேசத்தை பெறுகிறான். தன் உயிர் பிரியும் தருவாயில் ராவணன் லட்சுமணனுக்கு அளித்த மூன்று உபதேசங்கள் இங்கு உள்ளன. ராவணன் கொடுத்த மூன்று உபதேசங்கள் நல்ல செயல்களை என்றுமே தாமதப்படுத்தாமல் உடனே செய்ய வேண்டும். கெட்ட விஷயங்களை தாமதப்படுத்து காலமே அதற்கு முடிவை கொடுக்கும் என்பது முதல் உபதேசம் ஆகும்.
இரண்டாவது, உன் கருத்துக்கு எதிர்மறை கருத்தினை சொல்லும் நபர்களை உன்னுடனே வைத்துக்கொள். அப்போதுதான் நீ நல்லவை செய்தாலும் அதை சுட்டிக்காட்ட அவர்கள் உன்னுடன் இருப்பர். மூன்றாவது, உன்னுடைய காவல்காரன், தேரோட்டி, சமையல்காரன் மற்றும் முக்கியமாக உன்னுடைய சகோதரன் இவர்கள் நான்கு பேரையும் அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நீ எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் உன்னை வீழ்த்தும் சூட்சமம் இவர்கள் அறிவர் என்று உபதேசித்து அடுத்த கனமே உயிர் பிரிந்தார் ராவணன்.
இதையும் படிங்க : மயானத்தில் கடும் தவம்; சுழட்டி அடித்த பேய்கள்: நேரில் காட்சிக் கொடுத்த முருகன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com