Mythology | ஆறு மாதங்கள் தொடர் தூக்கம், ஆறு மாதங்கள் சாப்பாடு இப்படித்தான் நாம் கும்பகர்ணனை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த நிலைக்கு காரணம் என்னவென்று தெரியுமா. நல்ல புத்தி கூர்மையும் நெறி தவறாத வாழ்க்கை முறையையும் இரக்க குணத்தையும் கொண்டவர் தான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் மீது தேவர்களின் தலைவரான இந்திரனுக்கு சற்று பொறாமை ஏற்பட்டுள்ளது.
எனவே கும்பகர்ணனை பழிவாங்குவதற்காக திட்டம் தீட்டி சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார் இந்திரன். கும்பகர்ணன் தனது அண்ணன் ராவணன் மற்றும் விபீஷணனுடன் சேர்ந்து பிரம்மனை நோக்கி தவம் செய்தார். ராவணன் மற்றும் விபீஷணன் தங்களுக்கு இந்திராசனம் வரத்தை தருமாறு கேட்டனர்.
இந்திரன் சரஸ்வதியிடம் சென்று கும்பகர்ணனை இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனத்தை கேட்கச் செய்யுமாறு மன்றாடி கேட்டுக்கொண்டார். இந்திரனின் வேண்டுதலை ஏற்ற சரஸ்வதி அவ்வாறே செய்தார். அதன்படி, கும்பகர்ணனும் தவறாக வரத்தை கேட்டுவிட்டார். தான் மாற்றி வரம் கேட்டதை உணர்ந்த கும்பகர்ணன் பிரம்மதேவனிடம் சென்று இது குறித்து வேண்டி கேட்டார். இதனால், பிரம்மதேவர் வருடம் முழுவதும் இல்லாமல், ஆறு மாதங்களை குறைத்து மீதமுள்ள ஆறு மாதம் தூக்க நிலையில் இருக்கும்படி வரம் கொடுத்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.