Bengaluru: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த யோகா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
Bengaluru: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த யோகா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
Published on: September 22, 2025 at 10:42 am
பெங்களூரு, செப்.22, 2025: தனது யோகா மையத்தில் 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய யோகா மாஸ்டர் நிரஞ்சன் மூர்த்தியை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக ராஜராஜேஸ்வரி நகரில் ஒரு யோகா மையத்தை நடத்தி வருகிறார். மேலும் கர்நாடக யோகாசன விளையாட்டு சங்கத்தின் (KYSA) செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி அளித்த புகாரின்படி, சிறுமிக்கு 2019 முதல் மூர்த்தி தெரியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 இல் யோகா போட்டிகளில் சிறுமி பங்கேற்கத் தொடங்கியுள்ளார். 2023 ஆம் ஆண்டில், ஒரு சர்வதேச நிகழ்வில் பங்கேற்க தாய்லாந்திற்கு அவருடன் பயணம் செய்தார்.
இதையும் படிங்க : நாட்டு மக்களுக்கு நற்செய்தி.. ஜி.எஸ்.டி குறைப்பு.. பிரதமர் உரையின் ரத்தின சுருக்கம்!
இந்த பயணத்தின் போது, மூர்த்தி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமி புகாரில் தெரிவித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமி யோகா போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். எனினும், சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகா மாஸ்டர் தலைமறைவு
இந்தப் புகார் அளிக்கப்பட்ட பிறகு நிரஞ்சன் மூர்த்தி முதலில் தலைமறைவாகிவிட்டார். எனினும், அவர் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : பஸ் டிரைவருக்கு பளார் விட்ட சிங்கப் பெண்.. வீடியோவா அனுப்புற.. வீடியோ..?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com