Nipah Virus: மேற்கு வங்கத்தில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Nipah Virus: மேற்கு வங்கத்தில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Published on: January 13, 2026 at 5:33 pm
கொல்கத்தா, ஜன.13, 2026: மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் இருவருக்கு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மத்திய அரசு தேசிய கூட்டு தொற்று தடுப்பு குழுவை அனுப்பியுள்ளது.
இந்த நிபா பாதிப்புகள், ஞாயிற்றுக்கிழமை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறிதல் ஆய்வகத்தில், ஏம்ஸ் கல்யாணியில் உறுதிப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், மத்திய சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, “மத்திய அரசு மாநில அரசுடன் உறுதியாக நிற்கிறது. தொழில்நுட்ப, லாஜிஸ்டிக் மற்றும் செயல்பாட்டு ஆதரவுகளை மாநிலத்திற்கு வழங்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தகவல் கிடைத்தவுடன், சுகாதார மற்றும் குடும்ப நலச் செயலாளர், மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரச் செயலருடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், மத்திய-மாநில ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் நட்டா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர்: பனிக்காற்றால் மக்கள் அவதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com