Andhra Pradesh: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பி இருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Andhra Pradesh: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பி இருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on: July 2, 2025 at 9:58 am
திருப்பதி ஜூலை 2.2025: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய நிலையில், அண்ணன் தம்பி என இரு சகோதரர்கள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான திலீப் மற்றும் 20 வயதான வினய் ஆகியோர் சகோதரர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தார்கள். மேலும், வினய் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இருவரும் திருச்சானூர் அருகே உள்ள காலகட்டா என்ற பகுதியில் காரில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து காரில் அமர்ந்த படியே ஏசி போட்டு தூங்கி விட்டனர். மேலும் காரில் அமர்ந்து மது அருந்துவதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக காரின் கண்ணாடியையும் துணியால் மூடிவிட்டனர். இந்த நிலையில் காரின் ஏசி ஒரு கட்டத்தில் வேலை செய்யாமல் போய் உள்ளது. இதனால் காருக்குள்ளே இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க; தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலை; 34 பேர் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com