டிராக்டர் திருடச் சென்ற இடத்தில் குண்டு அடி வாங்கிய திருடன்; பஞ்சாபில் பரபரப்பு!

பஞ்சாபில் கடை உரிமையாளர் தனது டிராக்டரைத் திருட முயன்ற மர்மநபரை சுட்டு பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published on: November 16, 2024 at 5:29 pm

Tractor owner shoot at Thief |கட்டிடக் கட்டுமானப் பொருட்கள் கடையின் உரிமையாளர் தனது டிராக்டரைத் திருட முயன்ற மர்மநபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார்.

கெஹ்லேவால் சாலையில் மர்ம நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கட்டுமானப் பொருட்கள் கடை உரிமையாளருடைய டிராக்டருடன் செல்ல முயன்றுள்ளார். அப்போது, டிராக்கட் உரிமையாளர் விழித்துக் கொண்டதால் மர்ம நபரை தடுத்து நிறுத்த முயன்று, அவரால் முடியாததால் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். டிராக்டர் உரிமையாளர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்.

திருட்டு குற்றவாளியான விஷால் உள்ளூர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பஸ்தி ஜோதிவால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்திய கடை உரிமையாளரின் அடையாளத்தை பொலிசார் வெளியிடவில்லை.

இதையும் படிங்க குளிர்பானத்தில் போதை மருந்து: நீட் மாணவி பாலியல் வன்புணர்வு; 2 ஆசிரியர்கள் கைது

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com