West Bengal: மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற குழந்தை, பெண் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியானார்கள்.
West Bengal: மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற குழந்தை, பெண் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியானார்கள்.
Published on: September 29, 2025 at 1:37 pm
கொல்கத்தா, செப்.29, 2025: மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை உட்பட மூன்று பேர் ரயிலில் மோதி உயிரிழந்ததாக திங்கள்கிழமை (செப்.29, 2025) போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு ஷ்யாம்நகர் நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் ரயில்வேயின் அலட்சியத்தைக் குற்றம் சாட்டி ஒரு மணி நேரம் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, அந்தப் பெண் தண்டவாளத்தைக் கடக்கும்போது அவரது குழந்தை அவரது கைகளில் இருந்து நழுவி கோர் எக்ஸ்பிரஸ் நெருங்கி வந்த தண்டவாளத்தில் விழுந்தது” எனத் தெரிவித்தனர்.இந்நிலையில் அசாதாரண நிலைமையை உணர்ந்த பிளாட்பாரத்தில் இருந்த ஒரு பழ விற்பனையாளர் அவர்களைக் காப்பாற்ற விரைந்தார். இந்நிலையில், மூவரும் ரயிலில் அடிபட்டனர் என்றார்.
இதையும் படிங்க : பாலியல் வழக்கில் இருவருக்கு ஜாமின் மறுப்பு.. மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டிய நீதிபதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com