மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை திருநடை நாளை (நவ.15, 2024) திறக்கப்படுகிறது.
மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை திருநடை நாளை (நவ.15, 2024) திறக்கப்படுகிறது.
Published on: November 14, 2024 at 8:51 pm
Updated on: November 14, 2024 at 10:49 pm
Special Arrangement for Sabarimala Pilgrims | ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சபரிமலை திருநடை மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்படும். இந்த பூஜை 41 நாட்கள் நடைபெறும். இந்த நிலையில் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
இந்த மகர விளக்கு சீசன் டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு, 20, ஜனவரி 2025 காலை 6 மணிக்கு சாத்தப்படும். முன்னதாக மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
சிறப்பு ஏற்பாடுகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக தங்கி இளைப்பாறுவதற்கு கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ‘எடத்தவலம்’ எனப்படும் 5 ஆயிரம் சதுர அடி கொண்ட பிரத்யேக தங்குமிடம், விமான நிலையத்தின் உள்நாட்டு விமான வருகைப் பகுதிக்கு அருகே திறக்கப்பட்டுள்ளது. இதனை கேரள மாநில சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவி திறந்து வைத்தார்.
இந்த தங்குமிடத்தில் விமான அறிவிப்பு திரை, டேக்சி முன்பதிவு மையம், உணவகம், மற்றும் தேவசம்போர்டு சார்பில் இயக்கப்படும் உதவி மையம் ஆகிய வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க டெல்லியில் கடும் மாசு; என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com