Sonam Wangchuk case: தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Sonam Wangchuk case: தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Published on: October 3, 2025 at 12:42 pm
டெல்லி, அக்.3, 2025: பிரபல காலநிலை சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே அங்மோ, தனது கணவரை உடனடியாக விடுவிக்கக் கோரி இந்திய ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் மற்றும் லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தனது கணவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களின் நலனுக்காக ஆதரவளிப்பது “பாவமா” என்று அவர் தனது மேல்முறையீட்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மனுவில், “வாங்சுக் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகும் அவர் இருக்கும் இடம் வெளியிடப்படவில்லை என்று கீதாஞ்சலி குற்றம் சாட்டினார். தடுப்புக்காவலுக்கான காரணங்களோ அல்லது முறையான கைது ஆவணங்களோ குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
I have sought relief from the SUPREME COURT OF INDIA through a HABEAS CORPUS petition against @Wangchuk66’s detention.
— Gitanjali J Angmo (@GitanjaliAngmo) October 3, 2025
It is one week today. Still I have no information about Sonam Wangchuk’s health, the condition he is in nor the grounds of detention. pic.twitter.com/P4EPzO630A
குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
வன்முறையைத் தூண்டுவதாக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் சோனம் வாங்சுக் மறுத்துள்ளார், மேலும் இது மத்திய அரசின் கொள்கைகள் மீது உள்ளூர் மக்களிடையே நீண்டகாலமாக நிலவும் விரக்தியை மட்டுமே பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
வாங்சுக்கை தேச விரோதி என்று முத்திரை குத்தியதை அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ கடுமையாகக் கண்டித்துள்ளார். அத்தகைய கூற்றுக்களை அப்பட்டமான பொய்கள் என்று கூறி, அவருக்கு எதிராக அரசியல் சூனிய வேட்டை நடந்து வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை.. எப்போது தொடங்கிறது தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com