Kerala rapper Vedan sexual assault case: பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Kerala rapper Vedan sexual assault case: பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: July 31, 2025 at 11:21 am
கொச்சி, ஜூலை 31 2025: கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராப்ர் பாடகர் வேடன் என்று பிரபலமாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி மீது பாலியல் புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இளம் பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வேடன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வழக்குப்பதிவு
பிரபல ராப் பாடகர் வேடன் மீது ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரையிலான சம்பவங்களை உள்ளடக்கிய முறையான புகாரைத் தொடர்ந்து, ஜூலை 31, 2025 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த வேடன்?
பிரபல ராப் பாடகர் வேடன் 2019 ஆம் ஆண்டு தனது முதல் ஆல்பமான ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ மூலம் ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். இது சாதி பாகுபாடு மற்றும் நவீன கேரளாவின் முரண்பாடுகள் குறித்து பேசியது. இதனால் பல அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
போதைப் பொருள் பறிமுதல்- கைது
முன்னதாக, கொச்சியின் திரிபுனித்துராவில் உள்ள வைட்டிலா அருகே உள்ள வேடன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கிட்டத்தட்ட ஆறு கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஏப்ரல் 29, 2025 அன்று வேடன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரில் இருப்பது என்ன?
பெண் மருத்துவரிடம் காதலித்து பழகி, பணம் பெற்று மோசடி செய்துள்ளார் வேடன். மேலும், பெண் மருத்துவரிடம் தவறாக நடந்துக்கொண்டார் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com