Special Trains | தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத்- திருப்பதி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

February 17, 2025
Special Trains | தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத்- திருப்பதி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: September 27, 2024 at 12:00 pm
Special Trains | தசரா, தீபாவளி மற்றும் சாத் பூஜை பண்டிகை காலங்களில் மக்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், தென் மத்திய ரயில்வே பல்வேறு இடங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, எண். 07063 (கச்சிகுடா – திருப்பதி) கச்சேகுடாவில் இருந்து இரவு 10:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அக்டோபர் 1, 8, 15 மற்றும் நவம்பர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 10:25 மணிக்கு திருப்பதியை வந்தடையும்.
தொடர்ந்து, “யில் எண். 07064 ( திருப்பதி – கச்சேகுடா) திருப்பதியில் இருந்து இரவு 7:50 மணிக்குப் புறப்பட்டு, அக்டோபர் 2, 9, 16 மற்றும் நவம்பர் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காலை 9:30 மணிக்கு கச்சேகுடாவை வந்தடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்த சிறப்பு ரயில்கள் உம்தாநகர், ஷாத்நகர், ஜாட்செர்லா, மஹ்பூப்நகர், வனபர்த்தி சாலை, கட்வால், கர்னூல் சிட்டி, தோன், கூடி, யர்ரகுண்ட்லா, கடப்பா மற்றும் ரேனிகுண்டா ஆகிய நிலையங்களில் இரு திசைகளிலும் நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “ரயில் எண். 07041 (செகந்திராபாத் – திருப்பதி) ஒவ்வொரு சனிக்கிழமையும், அக்டோபர் 2, 9, 16, நவம்பர் 8, மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். ரயில் எண். 07042 திருப்பதி – செகந்திராபாத் அக்டோபர் 8 முதல் நவம்பர் 12 வரை ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்கள் கச்சேகுடா, உம்தாநகர், ஷாத்நகர், ஜாட்சர்லா, மஹ்பூப்நகர், வனபர்த்தி சாலை, கட்வால், கர்னூல் சிட்டி, தோன், கூடி, யர்ரகுண்ட்லா, கடப்பா மற்றும் ரேனிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயில்களில் 2ஏசி, 3ஏசி, ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் ஜெனரல் செகண்ட் கிளாஸ் பெட்டிகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நிஜாமுதீன்- கொச்சுவேலி முதல்.. 48 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென் மத்திய ரயில்வே
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com