Saif Ali Khan | நடிகர் சைஃப் அலிகான் தமக்கு ராகுல் காந்தியை பிடிக்கும் என கூறியுள்ளார்.

February 17, 2025
Saif Ali Khan | நடிகர் சைஃப் அலிகான் தமக்கு ராகுல் காந்தியை பிடிக்கும் என கூறியுள்ளார்.
Published on: September 27, 2024 at 2:25 pm
Saif Ali Khan | நேர்மை மற்றும் துணிச்சலானவர் என ராகுல் காந்தியை நடிகர் சைஃப் அலிகான் பாராட்டியுள்ளார்.
நடிகர் சைஃப் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராகுல் காந்தியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியா டுடே கான்க்ளேவில் பேசிய சைஃப், “ராகுலை நாட்டின் ‘துணிச்சலான’ அரசியல்வாதிகளில் ஒருவர்” என்றார்.
தேவாரா பார்ட் 1 படத்தில் நடிகர் சைஃப் அலிகான் நடித்துள்ளார். இந்தப் படத்தை தற்போது இவர் விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் இந்தியா டுடேயின் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் உங்களுக்கு எந்த வகையான அரசியல்வாதியை பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சைஃப் அலிகான், “எனக்கு நேர்மையான துணிச்சலான அரசியல்வாதியை பிடிக்கும்” என்றார்.
இதையடுத்து பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறினார். இதற்குப் பதிலளித்த சைஃப், “இவர்கள் மூவரும் மிகுந்த துணிச்சல்காரர்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து, “தமக்கு ராகுலை பிடிக்கும்” என்றார். முன்பெல்லாம் ராகுலின் பேச்சுகளை மக்கள் அவமரியாதை செய்யும் நிலை இருந்தது. ஆனால் அவர் கடினமாக உழைத்து மக்களை தன் பக்கம் திருப்புள்ளார்” என்றார்.
இதையும் படிங்க ராகுல் காந்தியை சந்தித்த நடிகை மேகா ஆகாஷ்: காங்கிரஸில் இணைகிறாரா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com