Harjinder Singh Bahman shot dead: பஞ்சாப்பில் அமிர்தசரஸில் அகாலிதளம் கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Harjinder Singh Bahman shot dead: பஞ்சாப்பில் அமிர்தசரஸில் அகாலிதளம் கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on: May 26, 2025 at 2:18 pm
அமிர்தசரஸ் மே 26 2025: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அகாலிதளம் கட்சியின் கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குற்றவாளிகள் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், குற்றவாளிகள் 5 முதல் 6 பேர் வரை இருக்கக்கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
#WATCH | Punjab: Akali Dal Councillor Harjinder Singh shot dead in Amritsar
— ANI (@ANI) May 25, 2025
Punjab Police ADCP Harpal Singh Randhawa says, "Bike-borne miscreants shot him. According to the family, 5-6 boys- Karan, Kishan, Suraj, against whom he had earlier complained that they sell drugs, are… pic.twitter.com/8tFjCi8uF0
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் காவல்துறை கூடுதல் துணை ஆணையர் ஹர்பால் சிங் ரந்தாவா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். குடும்பத்தினரின் கூற்றுப்படி, 5-6 சிறுவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம். இவர்கள் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கவுன்சிலர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. 5-6 ரவுண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளன” என்றார்.
இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு காரணமாக பலத்த காயமுற்ற கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங், பலத்த காயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் மரணம் அடைந்தார்.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். விரிவான விசாரணை நடந்துவருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார். அகாலிதளம் கவுன்சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரோமணி அகாலிதளம் கவுன்சிலர்
சிரோமணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜான்டியாலா குருவைச் சேர்ந்த கவுன்சிலர் ஆவார்.
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பும் சிங்கின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக போலீஸ் புகார் அளித்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சிரோமணி அகாலிதளம் கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு.. சவுதியிடம் சொல்வேன்; அசாதுதீன் ஓவைசி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com