‘ராகுல் இந்தியர் அல்ல; நம்பர் 1 பயங்கரவாதி’: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

Rahul Gandhi | Ravneet Bittu | ராகுல் காந்த இந்தியர் அல்ல; நம்பர் 1 பயங்கரவாதி என மத்திய அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.

Published on: September 15, 2024 at 11:31 pm

Rahul Gandhi | Ravneet Bittu | ராகுல் காந்தி நம்பர் 1 பயங்கரவாதி என்ற மத்திய அமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளன.

மத்திய அமைச்சர் பேச்சு

இதற்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, “ராகுல் பெரும்பாலும் இந்தியாவுக்கு வௌயே தான் இருக்கிறார். அவர் இந்தியர் கிடையாது. அவர் இந்தியாவை நேசிக்கவும் இல்லை; வெளிநாடு சென்றால் தப்பு தப்பாக பேசத் தொடங்கிவிடுகிறார்.

ராகுல் காந்தி பயங்கரவாதி

மிகவும் தேடப்படும் நபர்கள், பிரிவினைவாதிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் தயாரிப்பதில் வல்லுநர்கள், ராகுல் காந்தி கூறியதை பாராட்டுகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து, “விமானம், ரயில், சாலைகளை தகர்க்க முயலும் நாட்டின் எதிரிகள் ராகுல் காந்திக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நம்பர் பயங்கரவாதி, நாட்டின் மிகப்பெரிய எதிரியை பிடித்தால் பரிசு வழங்க வேண்டும் என்றால் அவர் ராகுல் காந்தியாகதான் இருப்பார்” என்றார்.

காங்கிரஸ் பதிலடி

இதற்கு பதலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தட்சீத், “ரவ்னீத் சிங் போன்றவர்களுக்காக நாம் பரிதாபப்படத்தான் முடியும். காங்கிரஸில் அவரது அரசியல் வாழ்க்கையும் குழப்பமாக இருந்தது. கடந்த காலங்களில் அவர் ராகுலை புகழ்ந்தார். தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார். தனது நேர்மையை காட்டுகிறார்” என்றார். ரவ்னீத் சிங் பிட்டு காங்கிரஸில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றவர் ஆவார். இதை குறிப்பிட்டு பேசிய தீட்சித், “அவர் காங்கிரஸில் இருக்கும்போதும் குழப்பமாக இருந்தார்” என்றார்.

இதையும் படிங்க :‘ஜம்மு காஷ்மீரில் இறுதி மூச்சை இழுக்கும் பயங்கரவாதம்; வம்ச அரசியல்’: பிரதமர் மோடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com