Rahul Gandhi: இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொலம்பியா நாட்டில் இருந்து பிரதமர் மோடியை தாக்கியுள்ளார்.
Rahul Gandhi: இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொலம்பியா நாட்டில் இருந்து பிரதமர் மோடியை தாக்கியுள்ளார்.
Published on: October 2, 2025 at 6:33 pm
போகோடா (கொலம்பியா), அக்.2, 2025: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சிக் தலைவருமான ராகுல் காந்தி கொலம்பியா நாட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள இ.ஐ.ஏ பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருக்கிறது” என மோடி அரசை தாக்கிப் பேசினார்.
இது குறித்து ராகுல் காந்தி, “பொறியியல் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இந்தியா வலுவான திறன்களைக் கொண்டுள்ளது, எனவே நான் நாட்டைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் இந்தியா சரிசெய்ய வேண்டிய கட்டமைப்பு குறைபாடுகளும் உள்ளன. மிகப்பெரிய சவால் இந்தியாவில் நடைபெறும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும்” என்றார்.
இதையும் படிங்க : ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை.. பி.ஆர் கவாய் தாயார் கடிதம்!
தொடர்ந்து ராகுல் காந்தி, “இந்தியாவில் பல மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகள் உள்ளன. உண்மையில், இந்த நாடு அடிப்படையில் இந்த மக்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான உரையாடலாகும்.
வெவ்வேறு மரபுகள், மதங்கள் மற்றும் கருத்துக்களுக்கு இடம் தேவை, அந்த இடத்தை உருவாக்குவதற்கான சிறந்த முறை ஜனநாயக அமைப்பு வேண்டும்” என்றார்.
மேலும், “இந்த ஜனநாயக அமைப்பின் மீது ஒட்டுமொத்த தாக்குதல் நடந்து வருகிறது, அது ஒரு பெரிய ஆபத்து. நாட்டின் சில பகுதிகளில் வெவ்வேறு கருத்துக்களுக்கு இடையிலான பதற்றம் மற்றொரு பெரிய ஆபத்தாக மாறிவருகிறது” என்றார். மேலும், “16-17 முக்கிய மொழிகள் மற்றும் பல மதங்களுடன், இந்த மாறுபட்ட மரபுகள் செழித்து வளர அனுமதிப்பதும், அவற்றுக்குத் தேவையான இடத்தை வழங்குவதும் மிக முக்கியம்” என்றார்.
இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.. ‘கடும் பதிலடி கொடுக்கப்படும்’..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com