Rahul Gandhi election campaign | நாட்டில் பழங்குடி, பட்டியல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இனங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என காங்கிரஸ் முள்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
Rahul Gandhi election campaign | நாட்டில் பழங்குடி, பட்டியல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இனங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என காங்கிரஸ் முள்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
Published on: November 9, 2024 at 4:22 pm
Updated on: November 9, 2024 at 4:25 pm
Rahul Gandhi election campaign | ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அப்போது, “நாட்டில் ஆழமான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் பழங்குடி, பட்டியல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இனங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை” என்றார்.
மேலும், “நாட்டில் 90 சதவீத மக்கள் தொகை இருந்தும் இவர்களுக்கு உரிய பிரிதிநிதித்துவம் கிடைக்கவில்லை” என்றார். தொடர்ந்து, “பிரதமர் நரேந்திர மோடி, தாழ்த்தப்பட்ட சமூகங்களை விட கார்ப்பரேட் சமூகங்களுக்கு ஆதரவாக உள்ளார்” என்றார்.
இதையடுத்து, “பிரதமர் தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறார். அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் திருமணங்களில் கலந்துகொள்கிறார். இதேபோல், பழங்குடி மற்றும் பட்டியலின மக்களின் திருமணங்களில் அவர் கலந்துகொள்ளவில்லை” என்றார்.
தொடர்ந்து, “இந்தியாவின் செல்வத்தை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவும், சமமான விநியோகத்தை உறுதி செய்யவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது” என்றார். இதையடுத்து, “கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நிறுவனங்களில் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு, இடஒதுக்கீட்டின் மீதான 50% வரம்பை நீக்குவோம்” என்றார்.
மேலும், “ஏழைகளில் எட்டு சதவிகிதம் பழங்குடியினர், 15 சதவிகிதம் தலித், 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 15 சதவிகிதம் சிறுபான்மையினர்” என்றார். இதையடுத்து, தற்போதைய ஜி.எஸ்.டி வரி முறை செல்வந்தர்களுக்கு பயனளிக்கிறது. உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதற்கு பதிலாக பொருளாதார பிளவை விரிவுபடுத்துகிறது” என்றார்.
இதையும் படிங்க வயநாட்டில் பிரியங்கா, ‘ஜமாத்-இ-இஸ்லாமி’ ஆதரவில் போட்டி: பினராய் விஜயன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com