ராகவ் சதா பாதுகாப்பு விலக்கல்.. பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு அதிரடி!

Raghav Chadha : பஞ்சாப் அரசு இசட் ப்ளஸ் (Z+) பாதுகாப்பை விலக்கிக் கொண்டதை அடுத்து, ராகவ் சதாவுக்கு மத்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: April 15, 2026 at 3:38 pm

Updated on: April 15, 2026 at 3:46 pm

சண்டிகர், ஏப்.15, 2026: மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதாவின் இசட் (Z+) பிரிவு பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இதையடுத்து, அவருக்கு மத்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் பஞ்சாப் தொடர்பான முக்கியப் பிரச்சினைகளை எழுப்பத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சதா கட்சிக்குள்ளேயே விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
அதாவது, பஞ்சாப் தொடர்பான முக்கியப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பத் தவறியதாக சதா மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், அவரது “செயலற்ற தன்மை” கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது என்றும் கூறியுள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்படாத பல நிதி விஷயங்களை பஞ்சாப் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதில், லுவையில் உள்ள சுமார் ரூ. 8,500 கோடி ஊரக வளர்ச்சி நிதி (RDF) தொகையும், கிட்டத்தட்ட ரூ. 60,000 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி தொடர்பான இழப்புகளும் அடங்கும்.

மேலும், ஜிஎஸ்டி இழப்பீட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான நிதிப் பின்னடைவுகள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு தொடர்பான சிக்கல்களையும் சீமா குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 1950களில் பார்த்த தி.மு.க.வை பார்க்க வேண்டியிருக்கும்.. மு.க ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com