Professor Ali Khan Mahmudabad: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத் கைது செய்யப்பட்டார்.
Professor Ali Khan Mahmudabad: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத் கைது செய்யப்பட்டார்.
Published on: May 20, 2025 at 7:12 pm
புதுடெல்லி, மே 21 2025: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான வழக்கில் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்தை நீதிமன்றக் காவலில் வைக்க ஹரியானா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஹரியானா காவல்துறை 7 நாள் காவலில் வைக்க கோரிய நிலையில், சோனிபட் நீதிமன்றம் பேராசிரியரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அசோகா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறைத் தலைவரான மக்முதாபாத், ஞாயிற்றுக்கிழமை (மே 19 2025) கைது செய்யப்பட்டார். அவரது சமூக ஊடகப் பதிவு ஆயுதப் படைகளை விமர்சிப்பதாக இருந்தது.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த பெண் அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரை அவமரியாதை செய்வதாகவும் காணப்பட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு ஆதரவாக, தலைமை நீதிபதி முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சோனிபட்டின் ராய் காவல் நிலையத்தில் பேராசிரியருக்கு எதிராக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரினார். இதனை நிராகரித்த நீதிபதி அலி கான் மக்முதாஃபாத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். இந்த வழக்கு மீண்டும் மே 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க : ஜோதி மல்கோத்ரா முதல் தேவேந்தர் சிங் வரை.. சிக்கிய 11 பாகிஸ்தான் உளவாளிகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com