பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் போலந்து நாட்டுக்கும், ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்கும் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (மேற்கு) தன்மயா லால், “போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்கின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் போலந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் போலந்துக்கு விஜயம் செய்வதால் இது ஒரு முக்கியப் பயணமாகும். நமது இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விஜயம் நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் நாட்டுக்கு செல்கிறார். இது தொடர்பாக தன்மயா லால், “உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்” எனத் தெரிவித்தார். முன்னதாக, ஜி7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார். இதற்கிடையில், கடந்த மாதம் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மோடி சந்தித்தார் என்பது நினைவு கூரத்தக்கது. செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)