Droupadi Murmu: சாந்தாலி மொழியின் ஒல் சிக்கி எழுத்து நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.
Droupadi Murmu: சாந்தாலி மொழியின் ஒல் சிக்கி எழுத்து நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.

Published on: December 29, 2025 at 12:43 pm
புதுடெல்லி, டிச.29, 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (திங்கள்கிழமை) சாந்தாலி மொழியின் ஒல் சிக்கி (Ol Chiki) எழுத்து நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) ஜம்ஷெட்பூரின் 15ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற உள்ளார். இதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஞ்சியிலிருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் ஜம்ஷெட்பூர் பயணம் செய்து, இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
கிழக்கு சிங்க்பூம் மாவட்டம், ஜம்ஷெட்பூர் புறநகரான கரந்திஹில் உள்ள திஷோம் ஜஹெர்தான் வளாகத்தில், ஒல் சிக்கி எழுத்து நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழா, ஆல் இந்தியா சாந்தாலி எழுத்தாளர் சங்கம் மற்றும் திஷோம் ஜஹெர்தான் குழு இணைந்து நடத்துகிறது. 1925-இல் பண்டிட் ரகுநாத் முர்மு தொடங்கிய ஒல் சிக்கி இயக்கத்தின் 100 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும், ஒல் சிக்கி எழுத்தை உருவாக்கிய பண்டிட் ரகுநாத் முர்முவுக்கு ஜனாதிபதி மரியாதை செலுத்துகிறார். பின்னர், சராய்கேலா கார்சாவான் மாவட்டம், அடித்யாபூர் பகுதியில் உள்ள NIT ஜம்ஷெட்பூர் 15வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு மாலை நேரத்தில் ராஞ்சிக்கு திரும்புகிறார்.
இதையும் படிங்க : வந்தே பாரத் முதல் ஸ்லீப்பர் கோச் ரயில்.. ரயில்வே அமைச்சகம் தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com