Vijayadashami 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Vijayadashami 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on: October 1, 2025 at 8:16 pm
புதுடெல்லி, அக்.1, 2025: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை (அக்.1, 2025) அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அதர்மத்தின் மீது தர்மம் பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி பண்டிகை, உண்மை மற்றும் நீதியின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தூண்டுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராவண தகனம் மற்றும் துர்கா பூஜை என கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, நமது தேசிய விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “கோபம், அகங்காரம் போன்ற எதிர்மறைப் போக்குகளைத் துறக்கவும், தைரியம், உறுதிப்பாடு போன்ற நேர்மறையானவற்றை ஏற்றுக்கொள்ளவும் இந்தப் பண்டிகை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
நீதி, சமத்துவம் மற்றும் நல்லிணக்கக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முன்னேறும் ஒரு சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ‘வங்காளிகள் அனைவரும் இந்தியர்கள்’.. தஸ்லிமாவுக்கு ஜாவேத் அக்தர் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com