எங்களுக்கு ஜனநாயகன் தேவை.. பீகாரின் வருங்கால முதல்வரே.. பரபரக்கும் போஸ்டர்கள்!

Nishant Kumar : பீகார் மாநிலத்தின் வருங்கால முதலமைச்சர் நிஷாந்த் குமார் என்ற போஸ்டர்கள் மாநிலத்தில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Published on: April 12, 2026 at 6:49 pm

பாட்னா, ஏப்.12, 2026: ஜனதா தளம் (ஐக்கிய) கட்சித் தொண்டர்கள், நிஷாந்த் குமாரை “பீகாரின் வருங்கால முதலமைச்சராக” ஆக்க வேண்டும் என்று கோரி, ஞாயிற்றுக்கிழமை பாட்னா முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அதில் நிதிஷ் தொண்டர்கள் என அவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த சுவரொட்டிகள், நிஷாந்த் குமார் மறைவிலிருந்து வெளியே வந்து தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சுவரொட்டிகளில் ஒன்றில் இந்தியில், “பீகாரில் எங்களுக்கு புல்டோசரோ, கலவரங்களோ தேவையில்லை. எங்களுக்கு லோக்நாயக் தேவை. அவர் மறைவிலிருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது. எங்களுக்கு இளைஞர் தலைவர் நிஷாந்த் குமார் தேவை,” என்று எழுதப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிஷாந்த் குமார் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது. இருப்பினும், முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை தலை வார மாட்டேன்.. ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி தாய் வேட்புமனு தாக்கல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com