இந்தியாவில் மீண்டும் கோவிட் அலைக்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் கோவிட் அலைக்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
Published on: September 1, 2024 at 12:22 am
Updated on: September 1, 2024 at 12:24 am
Covid in India | தென்கொரியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்தியாவும் கொரோனா அலையை எதிர்கொள்ள தயாரா இருக்க வேண்டும் சுகாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் நோய் தடுப்பு மையங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, நாட்டில் 25க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேபோல் தென்கொரியாவில் பெரும்பாலான மருத்துவமனைகளில் கோவிட் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய தகவலின்படி, 85 நாடுகளில் ஒவ்வொரு வாரமும் SARS-CoV-2 க்கு சராசரியாக 17 ஆயிரத்து 358 கோவிட் மாதிரிகள் சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சூடா ஒரு டம்ளர் நீர்; ஆமை போல் நடை: வாக்கிங் இப்படி ட்ரை பண்ணுங்க!
மேலும்,இந்த ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே இந்தியாவில் 908 புதிய கோவிட் -19 பாதிப்பும் இரண்டு இறப்புகளும் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் நிலைமை மோசமாக இல்லை என்றாலும், அதிகரிக்கும்பட்சத்தில் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் பேராசிரியர் தீபக் ஷெகல் ஐ.ஏ.என்.எஸிடம் கூறினார்.
இது குறித்து பேசிய அவர், “நிச்சயமாக வைரஸ் மீண்டும் வந்துவிட்டது. இறப்பு மற்றும் பாதிப்பு விகிதம் 26 சதவீம் மற்றும் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது உள்ள தொற்று பரவல் கேபி ஒமிக்ரான் பரம்பரையை சேர்ந்தது. இது வேகமாக பரவக் கூடியது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
கே.பி.2 ஓமிக்ரான் முதன் முதலில் ஜனவரி மாதத்தில் உலகளவில் அடையாளம் காணப்பட்டது. இது ஜே.என் .1 இன் வழித்தோன்றல் ஆகும். இந்தியாவில், கே.பி.2 முதன்முதலில் டிசம்பர் 2023 இல் ஒடிசாவில் கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், யூனியன் சுகாதார அமைப்பின் கோவிட் டாஷ்போர்டு இந்தியாவில் அசாம், புது தில்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளன” என்றார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com