Narendra Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் டெலிபோனில் பேசினார்.
Narendra Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் டெலிபோனில் பேசினார்.
Published on: October 10, 2025 at 11:03 am
Updated on: October 10, 2025 at 11:10 pm
புதுடெல்லி, அக்.10, 2025: பாலஸ்தீனத்தின் காசாவிற்கான அமெரிக்க ஆதரவுடன் கூடிய அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை இந்தியா வியாழக்கிழமை (அக்.9, 2025) வரவேற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் பாராட்டுகள் தெரிவித்தார்.
இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்க நிர்வாகம் 50% வரிகளை விதித்ததால் இந்தியா-அமெரிக்க உறவுகளில் தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வருகிறத.
இந்நிலையில், செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு மோடிக்கும் டிரம்பிற்கும் இடையேயான இரண்டாவது தொலைபேசி அழைப்பு இதுவாகும்.
பிரதமர் ட்விட்டர் பதிவு
Spoke to my friend, President Trump and congratulated him on the success of the historic Gaza peace plan. Also reviewed the good progress achieved in trade negotiations. Agreed to stay in close touch over the coming weeks. @POTUS @realDonaldTrump
— Narendra Modi (@narendramodi) October 9, 2025
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “எனது நண்பர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தேன். வரும் வாரங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு.. ரஷ்யா சிபாரிசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com