பேரிடர் மேலாண்மை, பயங்கரவாத எதிர்ப்பு.. மலேசியாவில் பிரதமர் மோடி- அன்வர் பேச்சுவார்த்தை!

PM Narendra Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

Published on: February 9, 2026 at 12:49 pm

கோலாலம்பூர், பிப்.9, 2026: மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்த சந்திப்பில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அவற்றில் பேரிடர் மேலாண்மை, ஒளி-ஒலி இணை தயாரிப்பு, ஊழல் தடுப்பு, செமிகன்டக்டர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்புகள் முக்கியமாவை ஆகும்.

மேலும் இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளும் பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை தகவல் பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளதாகக் கூறினார். தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எந்தவித இரட்டை நிலைப்பாடும், சமரசமும் இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதுமட்டுமின்றி, ஆற்றல், அடிப்படை வசதிகள், உற்பத்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா–மலேசியா ஒத்துழைப்பு வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, அரைகட்டளை, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் இணக்கம் ஆழப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா கொடுத்தால் விருதின் புகழ் மேலும் கூடும்.. மோகன் பகவத்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com