Narendra Modi: பீகார் சட்டமன்ற தேர்தலில், ஒன்றிணைந்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
Narendra Modi: பீகார் சட்டமன்ற தேர்தலில், ஒன்றிணைந்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
Published on: October 16, 2025 at 2:58 pm
புதுடெல்லி, அக்.16, 2025: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (அக்.15, 2025) நமோ செயலி மூலம் பாரதிய ஜனதா கட்சியின் பூத்-நிலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த உரையாடல் நிகழ்ச்சியின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக கட்சித் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக உள்ளன.
இதனை எடுத்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கங்களின் மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என்றும் தொண்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பாரதிய ஜனதா தொண்டர்களிடம் மாநிலத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க :பீகார் சட்டமன்ற தேர்தல்.. பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது தெரியுமா? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com