ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பரபரப்புரை ஆற்றினார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பரபரப்புரை ஆற்றினார்.
Published on: September 14, 2024 at 10:47 pm
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப். 14, 2024) “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தனது கடைசி மூச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து அவர், “இந்த அழகான பிராந்தியத்தை அழித்த” வம்ச அரசியலை எதிர்கொள்ள ஒரு புதிய தலைமையை பாரதிய ஜனதா முன்வைக்கிறது” என்றார். பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஜம்மு பிராந்தியத்தின் தோடா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்தார்.
नया जम्मू-कश्मीर विकास की नई गाथा लिख रहा है। डोडा में उमड़ा ये जनसमूह साफ बता रहा है कि लोकतंत्र यहां के लोगों की रगों में है। भाजपा को आशीर्वाद देने आए सभी परिवारजनों को मेरा कोटि-कोटि प्रणाम। https://t.co/Dyk2ntG6vG
— Narendra Modi (@narendramodi) September 14, 2024
தொடர்ந்து பேசிய அவர், “நாங்களும் நீங்களும் இணைந்து ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பாதுகாப்பான மற்றும் வளமான பகுதியாக மாற்றுவோம்” என்றார். செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமரின் முதல் தேர்தல் பேரணி இதுவாகும்.
இதில் பேசிய மோடி, “சுதந்திரத்திற்குப் பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீர் அந்நிய சக்திகளின் இலக்காக மாறியது. வம்ச அரசியல் இந்த அழகான பகுதியை உள்ளிருந்து வெற்றுத்தனமாக்கியது.
அரசியல் வம்சங்கள் தங்கள் குழந்தைகளை முன்னிறுத்தி புதிய தலைமையை வளர விடவில்லை” என்றார். 2014 ஆம் ஆண்டு மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இளம் தலைமைத்துவத்தை உருவாக்குவதில் தனது அரசாங்கம் கவனம் செலுத்தியது என்றார். மேலும், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் இறுதி மூச்சை இழுத்து வருகிறது” என்றார்.
இதையும் படிங்க : ‘ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு’: திருமாவளவன் வீடியோவை பதிவிட்டது யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com