MUDA scam: கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA)ஊழல் வழக்கில் மீண்டும் சிக்கலை எதிர்கொள்கிறார். புகார்தாரர் சினேகமாயி கிருஷ்ணா சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
MUDA scam: கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA)ஊழல் வழக்கில் மீண்டும் சிக்கலை எதிர்கொள்கிறார். புகார்தாரர் சினேகமாயி கிருஷ்ணா சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Published on: March 4, 2025 at 11:33 pm
கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா மீதான மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA)ஊழல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த மறுத்து நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டார். இந்நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா மார்ச் 4 ஆம் தேதி செவ்வாய் கிழமை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக சினேகமாயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவில், சித்தராமையா முதலமைச்சராக இருப்பதால் அவர் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வில்லை என்று சந்தேகிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மாநிலத் துறைகள், குறிப்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் கர்நாடக லோக்ஆயுக்த போலீசார் போன்ற அனைத்து துறைகள் மீதும் தங்கள் முழு அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்துவதால், பாரபட்சமற்ற விசாரணைக்கு சாத்தியமில்லை என்று தான் தாக்கல் செய்த மனுவில் வாதிட்டார். அந்த மனு பிப்ரவரி 7 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது,
இந்நிலையில், புதிதாக அவர் சமர்ப்பித்துள்ள மனுவில், சித்தராமையா மீதான எம்யுடிஏ ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மறுத்து நீதிபதி எம். நாகபிரசன்னா பிப்ரவரி 7 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
சமீபத்தில் MUDA வழக்கில் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றமற்றவர்கள் என லோக்ஆயுக்த போலீசார் தீர்ப்பளித்ததை அடுத்து, கிருஷ்ணா உயர் நீதிமன்றத்தை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகி கொலை.. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com