Rahul Gandhi: பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார் என்றாலும், அவரின் ரிமோட் கண்ட்ரோல் பா.ஜ.க.விடம் உள்ளது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Rahul Gandhi: பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார் என்றாலும், அவரின் ரிமோட் கண்ட்ரோல் பா.ஜ.க.விடம் உள்ளது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Published on: October 30, 2025 at 12:20 pm
பாட்னா, அக்.30, 2025: பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. மாநிலத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக நிதிஷ் குமார் உள்ளார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. பீகாரில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் முயற்சியாக ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை உள்ளிட்ட பேரணிகளை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், முசாஃபர்பூரில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் (பா.ஜ.க) முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார் தான் என்றாலும் அவரின் ரிமோட் கண்ட்ரோல் பாரதிய ஜனதா வசம் உள்ளது. நிதிஷ் குமாரை முன்னிறுத்தி பா.ஜ.க வாக்கு கேட்கிறது. அதன் பின்னர் அவர்கள் தங்கள் ஆட்டத்தை ஆடுவார்கள்” என்றார். தொடர்ந்து, பீகார் மக்களுக்கு நல்ல நாள்கள் கிடைக்க, இங்கு நல்ல ஆட்சி மலர வேண்டும், அந்த ஆட்சியை தேஜஸ்வி கொடுப்பார் என்றார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை
மேலும், பீகார் மாநிலத்தில் தேஜஸ்வி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பார் என்றும், தொழிலாளர்கள் புலம்பெயர்வது நிறுத்தப்படும் என்றும் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க: பீகாரில் நிதீஷ் குமார், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி.. வாரிசுகளுக்கு இடமில்லை; அமித் ஷா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com