ஹைதராபாத், ஏப்.19 2025: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப் பத்திரிகையில், காங்கிரஸின் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மௌனம் காப்பது ஏன் என பாரதிய ராஷ்ட்ரீய சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி. ராமா ராவ் அளித்த பேட்டியில், “நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயர்கள் அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.
இதனை கண்டித்து ஓர் அறிக்கை கூட ரேவந்த் ரெட்டி விடவில்லை. இது ஏன்? அவரின் மௌனம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “தற்போது ரேவந்த் ரெட்டி வெளிநாட்டில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியும் எனவும் கே.டி. ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியாவும் ராகுல் காந்தியும் தற்போது அதே வழக்கில் 2015 முதல் ஜாமீனில் உள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு, ₹2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ராகுல், சோனியா மீது வழக்கு: பீகாரில் ரயிலை மறித்த காங்கிரஸார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்