பாட்னா, ஏப்.18 2025: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஏப்.18 2025) பீகார் தலைநகர் பாட்னாவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இந்திய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரயில் பாதையை மறித்து ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேஷனல் ஹெரால்டு வழக்கு, ₹2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு 2014 ஆம் ஆண்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் உருவானது.
இந்த வழக்கில், சோனியாவும் ராகுல் காந்தியும் தற்போது அதே வழக்கில் 2015 முதல் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் வன்முறை அதிகரிப்பு: கவர்னர் பரபரப்பு பேட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்