Men Dress Up As Women | நாடு முழுவதும் வியாழக்கிழமை (அக்டோபர் 1) நவராத்திரி விழாக்கள் தொடங்கும் நிலையில், அகமதாபாத்தில் ஆண்கள் பெண்களின் புடவை அணிந்து கார்பா நடனத்தில் கலந்துகொண்டனர்.
இந்தப் பாரம்பரிய மிக்க நடனம் அகமதாபாத்தில் உள்ள சது மாதா நி போல் என்ற இடத்தில் கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
இந்த நிகழ்வில், பரோட் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் புடவை அணிந்து, ஒரு பழங்கால சாபத்தை நீக்கும் வகையில் கர்பாவை நிகழ்த்துகிறார்கள். இந்த பழமையான பாரம்பரியம் தவம் மற்றும் பக்தி மற்றும் பாலின பழக்கவழக்க கதையை குறிக்கிறது. மேலும், இந்த சடங்கு வெறும் நடனம் அல்ல; இது வரலாறு, புராணம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றிய பாரம்பரியமாகும்.
இந்த நூற்றாண்டு பழமையான வழக்கத்தில், சது மாதா என்ற பெண்ணின் கதை தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு பெண்ணால் தங்கள் மூதாதையர்களுக்கு இட்ட சாபத்திற்குப் பிராயச்சித்தம் செய்வதற்காக ஆண்கள் பெண்களைப் போல உடை அணிகிறார்கள்.
உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி, 200 ஆண்டுகளுக்கு முன்பு, சதுபென் என்ற பெண், பரோட் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களிடமிருந்து பாதுகாப்பைக் கோரினார். அதாவது, ஒரு முகலாய மன்னர் அவரை துணைவியாக்க துரத்தியுள்ளார். ஆனால் அப்பெண்ணுக்கு அவர்கள் அடைக்கலம் கொடுக்கவில்லை. இதனால் கோபமுற்ற அந்தப் பெண் சாபம் ஒன்றை போட்டுள்ளார். இந்த சாபம் நீங்க இவர்கள் இதனை இன்றளவும் கடைப்பிடித்துவருகின்றனர்.
இதையும் படிங்க
குஜராத்தில் மருத்துவ மாணவர் ராகிங் கொடுமையால் மரணமடைந்த விவகாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
குஜராத்தில் இன்று (நவ.15, 2024) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுக்கோலில் 4.2 என பதிவாகி உள்ளது….
Gujarat | Narendra Modi | “நாட்டை துண்டாக்க பேராசைக்காரர்கள் பசியில் இருக்கிறார்கள்” என பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் கூறினார்….
Gujarat | குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 24 முதலைகள் மீட்கப்பட்டன…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்