Maharashtra | தேசியவாத கட்சியின் தலைவர் சரத் பவார் சாதி அரசியலில் ஈடுபடுவதாக ராஜ் தாக்கரே குற்றஞ்சாடடியுள்ளார்.
Maharashtra | தேசியவாத கட்சியின் தலைவர் சரத் பவார் சாதி அரசியலில் ஈடுபடுவதாக ராஜ் தாக்கரே குற்றஞ்சாடடியுள்ளார்.
Published on: November 10, 2024 at 1:13 pm
Maharashtra | மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, “சரத் பவார் சாதி அரசியலில் ஈடுபடுகிறார்” எனக் குற்றஞ்சாட்டினார். புனேவில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ராஜ் தாக்கரே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது, “1999 முதல் சரத் பவார் சாதி அரசியலை தூண்டி லாபம் பாரக்கிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய ராஜ் தாக்கரே, “மகாராஷ்டிராவில் ஜாதி அரசியலை அறிமுகப்படுத்தியவர் சரத் பவார். அரசியல் லாபத்திற்காக சமூகத்தில் வெறுப்பு பரப்பப்பட்டது. முன்னதாக, பிராமணர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே சாதிப் பதற்றம் பரவியது. இப்போது மராத்தியர்கள் மற்றும் ஓபிசிகள் இடையே சாதிவெறி ஊக்குவிக்கப்படுகிறது.
நீங்கள் சந்திரகாந்த் பாட்டீல் அல்லது கிஷோர் ஷிண்டே என வாக்களிக்கும்போது வேட்பாளர்களை கருத்தில் கொள்ளுங்கள். ஆனால் அவர்களின் ஜாதிகளை பார்க்க வேண்டாம். மகாராஷ்டிராவில் ஜாதி அரசியலுக்கு பின்னால் சரத் பவார் உள்ளார். மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் (NCP) உருவானதில் இருந்து (1999 இல்) சாதிவெறி அதிகரித்து வருகிறது” என்றார்.
மகாராஷ்டிர சட்டசபைக்கு நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ம் தேதி நடக்கிறது. 2019 சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2014ல் பா.ஜ.க. 122 இடங்களும், சிவசேனா 63 இடங்களும், காங்கிரஸ் 42 இடங்களும் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பீகாரில் இடைத்தேர்தலை ஏன் ஒத்திவைக்கவில்லை? உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் மனு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com