Agra: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிர் வாழும் பெண்ணை, ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Agra: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிர் வாழும் பெண்ணை, ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: November 12, 2025 at 12:22 pm
ஆக்ரா (உ.பி), நவ.12, 2025: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் பிழைத்திருக்கும் பெண்ணை ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கறிஞர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போது அவரது கால் முறிந்துள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் ஜிதேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எப்படி வெளிவந்தது?
2022 பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக அவுரையாவிலிருந்து பயணம் செய்த 24 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞரின் செயல்கள் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீஸ் அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்டவரின் முந்தைய பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பினரை சிங் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சமரசம் பேசுவதற்காக, அவர் அந்தப் பெண்ணை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
போலீஸ் காவலில் வழக்கறிஞர்?
இந்த நிலையில், காயம் இருந்தபோதிலும், ஜிதேந்திர சிங் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வழக்கறிஞர் ஜிதேந்திர சிங்கின் கால் முறிவு காயத்துக்கு மருத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று கூரையில் இருந்து குதித்த நிலையில் ஜிதேந்திர சிங் கால் முறிந்து காயமுற்றார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : டெல்லி குண்டுவெடிப்பு.. மசூதியை கடந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்த கார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com