Bihar assembly election: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
Bihar assembly election: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
Published on: October 13, 2025 at 11:42 am
பாட்னா, அக்.13, 2025: பீகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் சரிசமமாக சீட்களை பிரித்தள்ளன. அதன்படி, இரு கட்சிகளும் 101 தலா 101 தொகுதிகளை பெற்றுள்ளன. தொடர்ந்து, சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களில் போட்டியிடுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி சீட் பகிர்வு விவரம்
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) : 101
பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) : 101
லோக் ஜனசக்தி கட்சி எல்ஜேபி(ஆர்வி) : 29
ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்.எஸ்.எம்) : 6
இந்துஸ்தானி அவாம் கட்சி (மதச்சார்பற்ற) : 6
2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் 115 இடங்களில் போட்டியிட்ட முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியுவுக்கு இது ஒரு சரிவாக பார்க்கப்படுகிறது.
மேலும், பாஜகவும் 110 இடங்களிலிருந்து குறைந்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான மதசார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்.எல்.எம்) தலா ஆறு இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க ஆன்மிக சுற்றுலா நகரமாக மாறும் கோவா? மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுமா? அமைச்சர் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com