VB – G RAM G Bill: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
VB – G RAM G Bill: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

Published on: December 27, 2025 at 5:27 pm
புதுடெல்லி, டிச. 27 2025: காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் வாய்ந்த இந்த கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூத்த தலைவர் சசிதரூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரசின் இந்த நிர்வாக குழு கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜி ராம் ஜி மசோதா மற்றும் வங்க தேசத்தில் நிலவும் அமைதியின்மை குறித்து விவாதிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (100 நாள் வேலை) தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது பெயர் மாற்றம் பட்டு சுருக்கமாக VB- ஜி ராம் ஜி என அழைக்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; டெல்லியில் தலைமைச் செயலர் மாநாடு.. என். முருகானந்தன் பங்கேற்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com