Digital payment in govt hospitals: கேரளா அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் கட்டண முறை, ஆன்லைன் சேவைகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இந்த அமைப்பு, மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
Digital payment in govt hospitals: கேரளா அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் கட்டண முறை, ஆன்லைன் சேவைகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இந்த அமைப்பு, மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
Published on: April 5, 2025 at 8:38 pm
திருவனந்தபுரம், ஏப்.5 2025: கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சனிக்கிழமை (ஏப்.5 2025) மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கு வசதியாக டிஜிட்டல் கட்டண முறைகள் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், முதல் கட்டமாக 313 மருத்துவமனைகள் இப்போது டிஜிட்டல் கட்டண முறையுடன் இணைந்துள்ளன. இதற்கிடையில், ஒரு மாதத்திற்குள் மீதமுள்ள மருத்துவமனைகளுக்கும் இந்த முறையை விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் UPI (Google Pay, PhonePe) போன்ற பிற முறைகளைப் பயன்படுத்தி சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த முடியும்.
இதற்கிடையில், ஆன்லைன் OP டிக்கெட், M-Health செயலி மற்றும் ஸ்கேன் 2025 ஏப்.7ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை, சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடங்கிவைக்கிறார்.
இந்த செயலியை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலி மூலம், பயனர்கள் முன்கூட்டியே ஓபி டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்.
மேலும், ஸ்கேன் அண்ட் புக் சிஸ்டம் மூலம், அரசு மருத்துவமனைகளுக்கு முன் டோக்கன் முன்பதிவு செய்யாமல் வரும் நோயாளிகள் வரிசையில் நிற்காமல் டோக்கனைப் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இன்று வக்ஃப், அடுத்து கத்தோலிக்க திருச்சபை நிலங்கள்.. பகீர் கிளப்பும் ராகுல் காந்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com