Priyanka Gandhi in Wayanad | வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Priyanka Gandhi in Wayanad | வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
Published on: September 26, 2024 at 3:14 pm
Priyanka Gandhi in Wayanad | அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “வயநாட்டில் பிரியங்கா காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்” என்றார். கேரளத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.சி வேணுகோபால், “வயநாட்டில் பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தார். கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்” என்றார்.
கேரளத்தின் வயநாடு ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டது. இது, மாநிலமே இதுவரை பார்க்காத பேரழிவாகும். இந்தப் பேரழிவில் இருந்து மாவட்டம் இன்னமும் மீளவில்லை. தற்போதுவரை காணாமல் போனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
வயநாடு நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொகுதியின் எம்.பியாக இருந்த ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்த நிலையில், இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.இந்தத் தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரசின் கொள்கையை தீர்மானிப்பது யார்? கங்கனாவா? மோடியா? ராகுல் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com