Waqf Bill voting: வக்ஃப் மசோதா வாக்கெடுப்பின் போது பிரியங்கா காந்தி கலந்து கொள்ளாததற்கு கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
Waqf Bill voting: வக்ஃப் மசோதா வாக்கெடுப்பின் போது பிரியங்கா காந்தி கலந்து கொள்ளாததற்கு கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on: April 8, 2025 at 2:17 pm
திருவனந்தபுரம், ஏப்.8 2025: சமஸ்தா கேரள ஜெம்-இய்யத்துல் உலமாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சுப்ரபாதம் இதழில் சமீபத்தில் வெளியான தலையங்கத்தில், “வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா, முக்கியமான வக்ஃப் மசோதா வாக்கெடுப்பு அமர்வின் போது மக்களவையில் இல்லை” என விமர்சித்துள்ளது. அதில், “பிரியங்கா காந்தி நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தவிர்ப்பதற்கான முடிவு அவரின் அரசியல் வரலாற்றில் ஓர் கரும்புள்ளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கொறடாவை மீறி சட்டமன்றத்தில் கலந்து கொள்ளாததன் மூலம், பிரியங்கா தன்னைத்தானே கறைப்படுத்திக் கொண்டார்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, பிரியங்காவின் வருகை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவரது கடமைகள் மீதான தீவிரத்தன்மை மற்றும் பொறுப்பின்மையைக் குறிக்கிறது எனவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
தொடர்ந்து, அவர் தனது நாடாளுமன்றக் கடமைகளை விட மற்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக, முன்னதாக, விவாதத்தின் போது காந்தி குடும்பத்தினர் இல்லாதது குறித்து பாஜக எம்.பி. தினேஷ் சர்மா கேள்வி எழுப்பி இருந்தார்.
அப்போது, “நாடாளுமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கண்டது. ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா அல்லது சோனியா காந்தி ஆகியோர் எதுவும் பேசவில்லை. அவர்கள் அதற்கு ஆதரவாக இருந்தார்களா அல்லது எதிராக இருந்தார்களா என்பது தெரியவில்லை… இந்த மசோதா சிறுபான்மையினரின் நலனுக்காகவே இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும், கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தலைவர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்” என்றார்.
இந்த நிலையில், வக்ஃப் மசோதா வாக்கெடுப்பில் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் இது குறித்து எவ்வித விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி. கே. சிவக்குமார் நீட்டிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com