Telangana Gram Panchayat elections 2025: தெலங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் முதல்கட்டமாக 84.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Telangana Gram Panchayat elections 2025: தெலங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் முதல்கட்டமாக 84.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Published on: December 12, 2025 at 5:16 pm
ஹைதராபாத், டிச.12, 2025: தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 4,236 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 37,440 வார்டுகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 395 கிராம பஞ்சாயத்து மற்றும் 9,331 வார்டு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் விளைவாக 3,800க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 27,960 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், ஆட்சியில் உள்ள காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றிப் பெற்றுள்ளனர். போட்டியிட்ட கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றனர். எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் சுமார் 800 கிராமங்களில் வெற்றி பெற்றது. பாஜக சுமார் 150 கிராமங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இந்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும்; மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜோர்டான் முதல் ஓமன் வரை.. பிரதமர் 4 நாள் பயணம்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com