Kerala: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக இன்று (செப்.26, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Kerala: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக இன்று (செப்.26, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: September 26, 2025 at 11:03 am
திருவனந்தபுரம், செப்.26, 2025: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும், தொழில்முறை கல்லூரிகள் உட்பட இன்று ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், திட்டமிடப்பட்ட பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அந்த உத்தரவு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், “கனமழை காரணமாக, திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். இருப்பினும், திட்டமிடப்பட்ட பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தென் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்கள் வானிலை நிறுவனத்தின் கண்காணிப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பீகாரில் தனியார், பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு.. ராகுல் காந்தி வாக்குறுதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com