Cold wave alert for Telangana: தெலங்கானா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் குளிர் அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cold wave alert for Telangana: தெலங்கானா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் குளிர் அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: December 22, 2025 at 12:07 pm
புதுடெல்லி, டிச.22, 2025: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (திங்கள்கிழமை) தெலங்கானா மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்படும் மாவட்டங்கள்
வானிலை நிலை
காலை நேரங்களில் மூடுபனி அல்லது பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரவு நேரங்களில் மங்கலான நிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த இரண்டு நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சாதாரணத்தை விட 2–3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் காலநிலை
தெலங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் 10°C-க்கு குறைவான வெப்பநிலையை பதிவு செய்துள்ளன. சங்காரெட்டி மாவட்டம், கோஹிர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.3°C என பதிவாகியுள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) எல்லைக்குள், ஹைதராபாத் பல்கலைக்கழகம் 8.3°C எனக் குறைந்த வெப்பநிலையை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அருணாச்சலப் பிரதேச உள்ளாட்சி தேர்தல்; பா.ஜனதா வரலாற்று வெற்றி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com