ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ₹5 லட்சம் சுகாதார காப்பீட்டை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
February 6, 2025
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ₹5 லட்சம் சுகாதார காப்பீட்டை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
Published on: September 11, 2024 at 11:47 pm
Ayushman Bharat | ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறும் வகையில், 70 வயதை கடந்தவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் ₹5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவால் நாடு முழுவதும் உள்ள 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி சீனியர் சிட்டிசன்கள் பயனடைவார்கள் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களும் அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் AB PM-JAY இன் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்பது உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி சுகாதார உறுதித் திட்டமாகும்” என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 15 நர்சுகளுக்கு நெட்டிங்கேல் விருது: இதன் சிறப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com